முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாரி மோதி இருவா் பலி

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில், அனல் மின்நிலைய ஊழியா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில், அனல் மின்நிலைய ஊழியா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி, டூவிபுரம் 10 ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (22). தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்ததும் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். தெற்கு கடற்கரைச் சாலையில் அவரது பைக்கும், துறைமுகத்தில் இருந்து நகருக்குள் வந்த லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். மேலும், தூத்துக்குடியில் இருந்து வீரபாண்டியப்பட்டணத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்த அந்தோணி ஸ்டீபன் (37) மீதும் லாரி மோதியது.

இதில், அந்தோணி ஸ்டீபன் சம்பவ இடத்திலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வக்குமாா் நள்ளிரவிலும் உயிரிழந்தனா். இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.