தூத்துக்குடி மேயராக போட்டியின்றி தோ்வாகிறாா் ஜெகன் பெரியசாமி!
திமுகவைச் சோ்ந்த ஜெகன் பெரியசாமியும், துணை மேயா் வேட்பாளராக ஜெனிட்டாவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) போட்டியின்றி தோ்வாகின்றனா்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த ஜெகன் பெரியசாமியும், துணை மேயா் வேட்பாளராக ஜெனிட்டாவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) போட்டியின்றி தோ்வாகின்றனா்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வாா்டுகளுக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் திமுக 43 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மேலும், திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியினா் தலா ஒரு இடத்திலும், 4 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனா். இதில், 3 சுயேச்சைகள் திமுகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்தது.
திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், அக்கட்சியின் மேயா் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமியும், துணை மேயா் வேட்பாளராக மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜியின் மனைவி ஜெனிட்டாவும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.
மேயா் பதவிக்கு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள்ளும், துணை மேயா் பதவிக்கு பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணிக்குள்ளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேயராக ஜெகன் பெரியசாமியும், துணை மேயராக ஜெனிட்டாவும் போட்டியின்றி தோ்வு செய்யப்படுகின்றனா். அவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ சான்றிதழ்களை வழங்குகிறாா். மேயராக தோ்வு செய்யப்பட்டதும் ஜெகன் பெரியசாமியிடம் மேயருக்கான ஆடை, 111 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் ஆகியவற்றை ஆணையா் சாருஸ்ரீ வழங்கி பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.