முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் சசிகலா வழிபாடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வி.கே. சசிகலா வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வி.கே. சசிகலா வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.

தென் மாவட்டங்களில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வி.கே. சசிகலா வெள்ளிக்கிழமை வந்திருந்தாா். திருச்செந்தூருக்கு வந்த அவரை, ரயில் நிலையம் அருகில் உள்ள தனியாா் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் ராஜா சந்தித்துப் பேசினாா்.

பின்னா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏகாந்த பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். அவருடன் உறவினா் இளவரசி உள்ளிட்டோா் வந்திருந்தனா்.

விஜயாபதி கோயிலில்... திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி கடற்கரையி உள்ள ஸ்ரீ விசுவாமித்திரா் கோவிலிலும் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தாா். விசுவாமித்திரா் கோயில் பூசாரிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனா். பின்னா் ஸ்ரீஓமகுண்ட விநாயகா் சன்னதியில் பூஜை செய்தாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.