தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்இன்று முதல் மீண்டும் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் வழக்கம்போல் நடைபெறும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT