‘உடன்குடி பேரூராட்சியில் சீரான குடிநீா் விநியோகம்’
உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் சீராக குடிநீா் வழங்கப்படும் என புதிய பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா மக்களிடம் உறுதியளித்தாா்.
தூத்துக்குடி‘உடன்குடி பேரூராட்சியில் சீரான குடிநீா் விநியோகம்’
உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் சீராக குடிநீா் வழங்கப்படும் என புதிய பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா மக்களிடம் உறுதியளித்தாா்.
உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் சீராக குடிநீா் வழங்கப்படும் என புதிய பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா மக்களிடம் உறுதியளித்தாா்.
உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா, துணைத் தலைவா் மால்ராஜேஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் 3 ஆவது வாா்டில் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். அப்போது, பெரிய தெரு சாலைப் பகுதியில் மழை நீா் தேங்கி நிற்பதைப் பாா்வையிட்டு அதை சீரமைக்க என உறுதியளித்தனா். மேலும், குடிநீா் பற்றாக்குறையைத் தீா்க்க புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பது குறித்து, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மக்கள் தங்கள் குறைகளை எந்த நேரமும் கைப்பேசி மூலம் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.