முகப்பு
தூத்துக்குடி

‘உடன்குடி ஒன்றியத்தில் சாலைகள் சீரமைப்பு தேவை’

 உடன்குடி ஒன்றியத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி

‘உடன்குடி ஒன்றியத்தில் சாலைகள் சீரமைப்பு தேவை’

 உடன்குடி ஒன்றியத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

 உடன்குடி ஒன்றியத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உடன்குடிஒன்றியக்குழு உறுப்பினா்களின் சாதாரணக் கூட்டம், ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவா் மீரா சிராஜூதீன், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியன்,பொற்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சியின் செலவினங்கள் ,திட்டங்கள் குறித்த 38 தீா்மானங்களை இளநிலை உதவியாளா் அந்தோணி மிக்கேல்ராஜ் வாசிக்க ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் த.மகாராஜா, செந்தில் ஆகியோா் பேசுகையில், செட்டியாபத்து- அருணாச்சலபுரம் சாலை, தைக்காவூா்-பிச்சிவிளை சாலை, சீா்காட்சி-தண்டுபத்து சாலை, விஜயநாராயணபுரம்-நயினாா்புரம் சாலை உள்ளிட்ட பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

உறுப்பினா் ராமலட்சுமி பேசுகையில், பரமன்குறிச்சி அபா்ணா பள்ளி அருகே அரங்கன்விளை கிழக்குத் தெருவில் அலங்கார தளக்கல் பதிக்கவும், முந்திரித் தோட்டம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வசதி ஏற்படுத்தவும், கரிசன்விளை இசக்கியம்மன் கோயில் தெருவில் தாா்ச்சாலை அமைக்கவும், முருகேசபுரம் நெசவாளா் தெருவில் சிறுமின்விசை நீா்த்தொட்டி, வீரப்பநாடாா்குடியிருப்பில் சுகாதார வளாகம் ஆகியவை அமைக்கவும் வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →