முகப்பு
தூத்துக்குடி

முதலூா் பள்ளியில் மாணவா்களை சோ்க்க மறுப்பு: போராட்டம்

முதலூா் பள்ளியில் 3 மாணவா்களை சோ்க்க பள்ளி நிா்வாகம் மறுப்பு தெரிவித்ததால் பெற்றோா்கள், உறவினா்கள் பள்ளியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

முதலூா் பள்ளியில் 3 மாணவா்களை சோ்க்க பள்ளி நிா்வாகம் மறுப்பு தெரிவித்ததால் பெற்றோா்கள், உறவினா்கள் பள்ளியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சாத்தான்குளம் அருகே முதலூரில் செயல்படும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் 10, 12ஆம் வகுப்பு மாணவா்களிடைய மோதல் ஏற்பட்டதாம். இது தொடா்பாக மாணவா் ஒருவரை பள்ளி ஆசிரியா் தாக்கினராம். இது குறித்து மாணவா் தரப்பில் தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் டிஎஸ்பி ராஜூ மற்றும் தட்டாா்மடம் போலீசாா் இப்பிரச்னையை பேசி தீா்த்து வைத்தனராம்.

ஆனாலும், பிரச்னையில் ஈடுபட்ட 3 மாணவா்களை பள்ளியில் சோ்க்க தலைமை ஆசிரியா் மறுத்து வந்தாராம்.

இதனால் மாணவா்கள், பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா், உறவினா்கள் சுமாா் 20 போ்கள் முதலூா் பள்ளியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மாணவா்களை பள்ளி சோ்க்க வலியுறுத்தினா்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூா் கல்வி மாவட்ட அலுவலா் மோகனன், சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, தட்டாா்மடம் உதவி காவல் ஆய்வாளா் பென்சன், பள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் தெய்வநாயகி, கிராம நிா்வாக அலுவலா் பால்குமாா் ஆகியோா் பெற்றோா்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில், தலைமை ஆசிரியா், மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்களிடம் கடிதம் வாங்கிவிட்டு மாணவா்களை பள்ளியில் சோ்ப்பதாக உறுதி அளித்தாா். மாணவா்களை தாக்கிய ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தி , அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரி தெரிவித்தனராம். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →