துரை வையாபுரி (கோப்புப் படம்) 
தூத்துக்குடி

தமிழக அரசு உறுதியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்காது: துரை வையாபுரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு இருப்பதாக மதிமுக  தலைமை  செயலாளர் துரை வையாபுரி தெரிவித்தார்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு இருப்பதாக மதிமுக  தலைமை  செயலாளர் துரை வையாபுரி தெரிவித்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயலாளர் துரை வையாபுரி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் ,
தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மின்வெட்டு நிலவுவதற்கு மத்திய அரசின் தவறான கொள்கை முடிவு தான் காரணம். தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னை இன்னும் மூன்று வாரங்களில் சரியாக வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

தமிழக ஆளுநர் 7 பேர் விடுதலை, நீட்  உள்ளிட்ட மசோதாக்களை கையெழுத்திடாமல் ஆளுநர் தொடர்ந்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறார். அவர் தமிழக ஆளுநராக செயல்பட வில்லை. பாஜகவின் ஆளுநராக செயல்படுகிறார். தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் வரவேண்டிய சுமார் 20 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. எனவேதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. வரும் நான்கு ஆண்டுகளில் தமிழக முதல்வர் சிறந்த முதல்வராக முத்திரை பதிப்பார். மிகச் சிறந்த ஆட்சியை செயல்படுத்துவார் என்று கூறினார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்கள் தன்னை சந்தித்த போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற அச்சம் இருப்பதாக  தன்னிடம் தெரிவித்ததாக கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நான்காண்டுகளாக செயல்படாததால் காற்று, நிலம், நீர் ஆகியவை மாசுபடாமல் தாங்கள் நன்றாக இருப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலை இருக்கும்போது ஸ்டெர்லைட்  பத்து என்ற தோல் நோய் தற்போது நான்கு ஆண்டுகளாக தங்களை பாதிக்கவில்லை என்றும், தன்னை சந்தித்தபோது அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார். 

கிராம மக்களிடம் தமிழக அரசு உறுதியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்காது என்று உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT