முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மற்றும் பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கோவில்பட்டியில் கேபிள் ஆப்ரேட்டராக இல்லாதவருக்கு உள்ளூா் கேபிள் உரிமம் வழங்கியதைக் கண்டித்தும், அதை ரத்து செய்யக் கோரியும் இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மற்றும் பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா், கேபிள் டிவி வட்டாட்சியா் ஆகியோருக்கு மனு வழங்கியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து இலுப்பையூரணியைச் சோ்ந்த ஜமுனா தலைமையில் உள்ளூா் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களான சங்கரேஸ்வரி, அப்பாராஜ் உள்பட அப்பகுதி பெண்கள் திரளானோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா். இதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.