முகப்பு
தூத்துக்குடி

செயற்கை முறையில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் அழிப்பு

கோவில்பட்டியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கோவில்பட்டியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள கிடங்கில் மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்ததாம். அவரது உத்தரவின் பேரில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு அக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 4 டன் மாம்பழங்களை ஆய்வு செய்தாா். அவை ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலா் முன்னிலையில், நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி சுகாதாரப் பணியாளா்கள் அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.