முகப்பு
தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: ஒருவா் கைது

கோவில்பட்டி அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா் லிங்கம்பட்டி புதுகாலனியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணி லூா்துசாமி (59) எனத் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்த கேரள மாநில லாட்டரிச் சீட்டுகள், ரூ. 8,900 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.