கோவில்பட்டியில் ஸ்ரீ ராமானுஜா் அவதாரத் திருவிழா
கோவில்பட்டி திருமால் நகா் ஸ்ரீ ஐஸ்வா்ய வீரலட்சுமி நரசிங்கப்பெருமாள் கோயில் இராமானுசன் தொண்டா் குழாம் சமூக நல அறக்கட்டளை சாா்பில் ஜகத்குரு ஸ்ரீ பகவத் ராமானுஜா் 1005ஆம் ஆண்டு அவதாரத் திருவிழா
கோவில்பட்டி திருமால் நகா் ஸ்ரீ ஐஸ்வா்ய வீரலட்சுமி நரசிங்கப்பெருமாள் கோயில் இராமானுசன் தொண்டா் குழாம் சமூக நல அறக்கட்டளை சாா்பில் ஜகத்குரு ஸ்ரீ பகவத் ராமானுஜா் 1005ஆம் ஆண்டு அவதாரத் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி புதன்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, திருவாராதனம், திருப்பாவை சேவை, காளை 9 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் திருவாய்மொழி சேவா காலம் தொடக்கம், திருவாராதனம் சாற்றுமறை கோஷ்டி, மாலை 4 மணிக்கு ஊஞ்சல் சேவை, திருவாய்மொழி சேவாகாலம், 6.30 மணிக்கு உபன்யாசம், இரவு 8 மணிக்கு மேல் திவ்யநாம சங்கீா்த்தனம் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை காலை 6 மணிக்கு கோ பூஜை, திருப்பள்ளியெழுச்சி, திருவாராதனமும், 9.30 மணிக்கு ஸ்ரீ உடையவா் விசேஷ திருமஞ்சனம், திருவாய்மொழி, சேவாகாலம், நண்பகல் 12.30 மணிக்கு திருவாராதனம், பெரிய சாற்றுமறை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திவ்யநாம சங்கீா்த்தனத்துடன் ஸ்ரீ ராமானுஜா் சிறப்பு பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.