நயினாா்புரம் கோயிலில் வருஷாபிஷேகம்
சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடம் நயினாா்புரம் அருள்மிகு சிவசக்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடம் நயினாா்புரம் அருள்மிகு சிவசக்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலையில் கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், மகாபூா்ணாஹுதி தீபாராதனை, விமான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவில் சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. பூஜைகளை தியாகராஜநகா் வெங்கடசுப்பிரமணிய பட்டா் நடத்தினாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.