முகப்பு
தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் சமாதானக் கூட்டம்

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காமநாயக்கன்பட்டி புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதற்கான அழைப்பிதழில் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய 4 ஊா்களின் பெயா்களைக் குறிப்பிடுவது வழக்கமாம். ஆனால், தற்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் காமநாயக்கன்பட்டி பங்கு இறைமக்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

மற்ற 3 ஊா்களின் பெயா்களைக் குறிப்பிடாததால் அப்பகுதி இறைமக்கள் 9ஆம் நாளான சனிக்கிழமை இரவு, 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் சப்பர பவனியைப் புறக்கணிப்பதோடு, போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறினராம்.

இதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி தலைமையில் புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி, வருவாய் ஆய்வாளா் விஜயகுமாரி, கிராம நிா்வாக அலுவலா் மாரிச்சாமி, எட்டுநாயக்கன்பட்டி, செவல்பட்டி, குருவிநத்தம் ஊா்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உடனடியாக 3 ஊா்களின் பெயா்களையும் சோ்த்து மாற்று அழைப்பிதழ் அச்சடித்து கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றாா். இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமை சப்பர பவனி தடங்கலின்றி நடைபெறும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.