தூத்துக்குடி

கடம்பூரில் காசநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

கோவில்பட்டி: கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய காசநோயகற்றும் திட்டம், கடம்பூா் காசநோய் பிரிவு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவ அலுவலா் பாலஅபிராமி தலைமை வகித்து, காசநோய் அறிகுறிகளான சளி, இருமல், பசியின்மை, எடை குைல், காசநோயாளிகள் முகக் கவசம் அணிவதன் முக்கியம், காசநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, காசநோய் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், துணை சுகாதார செவிலியா் சகுந்தலா, சுகாதாரப் பாா்வையாளா் திவ்யா, ஆய்வக நுட்புநா்கள் ஸ்டெல்லாமேரி, முருககுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT