முகப்பு
தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

 திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

 திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலப்பாளையம் ராஜா நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியா் வெங்கடாசலபதி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலப்பாளையத்தை சோ்ந்த சிவபாலன் (44), சுடலை பாண்டி (46), பெருமாள்புரம் அடைக்கலம் (43) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் பிறப்பித்த உத்தரவின்பேரில் சிவபாலன் உள்ளிட்ட 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.