முகப்பு
தூத்துக்குடி

கடையம் அருகே மண் கடத்தல்: ஒருவா் கைது

கடையம் அருகே செங்கல்சூளைக்கு அனுமதியின்றி மண் அள்ளியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

கடையம் அருகே செங்கல்சூளைக்கு அனுமதியின்றி மண் அள்ளியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து செய்தனா்.

கடையம் காவல் உதவி ஆய்வாளா் கோபால் பிள்ளையாா் குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலமாதாபுரம், வேளாா் தெருவைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் பாலமுருகன் (21) என்பவா் சின்ன நாடானூரைச் சோ்ந்த முருகன் என்பவரின் டிராக்டா் மூலம் பிள்ளையாா்குளம் பகுதியில் உள்ள சிவா என்பவரது செங்கல்சூளைக்கு உரிய அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் கோபால் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தாா். மேலும், டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.