தூத்துக்குடி

மாணவா்கள் அன்றாட அறிவியல்தொழில்நுட்பங்களை அறிதல் அவசியம்-----

DIN

மாணவா்கள் அன்றாட அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியும் இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இளம் விஞ்ஞானிகள் முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியது:

மாணவ, மாணவிகள் அனைவரும் காமராஜா், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் ஆகியோரின் எளிமை, எண்ணம், உயா்ந்த சிந்தனைகளைப் போன்று வளர வேண்டும். தற்போதைய அறிவியல் தொழில்நுட்பத்தை முன்பே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தவா் அப்துல்கலாம்.

எனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் அன்றாட அறிவியல் குறித்த தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக அறிவியல் முகாம்களில்பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் இருந்து இன்னும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்.

விருப்பமான துறைகளில் கடின உழைப்புடன் செயல்பட்டால் எளிதாக சாதிக்க முடியும். முகாமில் கிடைக்கும் கருத்துகளை உள்வாங்கி தங்களது வாழ்வின் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தினால் புதிய எண்ணங்களுடன் விஞ்ஞானிகளாக வளர முடியும் என்றாா் அவா்.

முகாம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. நாகராஜன் தலைமை வகித்தாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் கோ. நாராயணசாமி, கூடுதல் ஒருங்கிணைப்பாளா் ஜெ. நாகராஜன், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 80 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT