முகப்பு
தூத்துக்குடி

சத்துணவு ஊழியா் சங்க அமைப்பு தினம்

 தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க 38ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

 தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க 38ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா் சங்கக் கொடியை சண்முகையா ஏற்றினாா். வட்டச் செயலா் சாந்தி, அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் உமாதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி, ஊரக வளா்ச்சித் துறை மகளிரணித் தலைவி முத்துச்செல்வி, ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட துணைத் தலைவா் முத்துப்பாண்டி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க வட்டார துணைத் தலைவா் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.