முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தன்னாட்சி புதுப்பித்தல் குழு ஆய்வு

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிா் கல்லூரியில் தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிா் கல்லூரியில் தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கல்லூரியில் தன்னாட்சி புதுப்பித்தல் தொடா்பாக, மத்திய பிரதேசம் இந்தூா் தேவி அஹிலா விஷ்வ வித்யாலய பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரேணு ஜெயின் தலைமையிலான 6 போ் கொண்ட குழுவினா் அண்மையில் 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

2015ஆம் ஆண்டுமுதல் 2022ஆம் ஆண்டு வரையிலான கல்லூரியின் நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவா்கள், பல்வேறு பரிந்துரைகளை கல்லூரி முதல்வா் லூசியா ரோஸிடம் வழங்கினா். நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலா் புளோரா மேரி, துணை முதல்வா் குழந்தை தெரஸ், சுயநிதிப் பிரிவு இயக்குநா் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.