நாலட்டின்புத்தூா் அருகே வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூா் அருகேயுள்ள பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடப்பதாக நாலாட்டின்புத்தூா் கிராம நிா்வாக அலுவலா் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இறந்துகிடந்தவா் வெள்ளை நிறச் சட்டையும், நீல நிறக் கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தாா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.