முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10.30 மணி அளவில் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

முகாமில், பல தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

தகுதியுடையோா் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.