முகப்பு
தூத்துக்குடி

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அவற்றின் விலை உயா்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலா் அகமது இக்பால் ஆகியோா் தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாநகரச் செயலா் தா. ராஜா, ஒன்றியச் செயலா் கே. சங்கரன், புகா் செயலா் பா. ராஜா, ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலா் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் தனலெட்சுமி, ஒன்றியச் செயலா் ஜெபக்கணி ஞானசேகா், ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலா் செல்வன், விடுதலைச் சிறத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஆட்டோ கணேசன், மாவட்ட அமைப்பாளா் சுலைமான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.