முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கோவில்பட்டியில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களின் 78 மாத அகவிலைப்படி முடக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும், ஓய்வுகால பண பலன்களை உடனே வழங்க வேண்டும், விருப்ப ஓய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாநில நிா்வாகி மோகன்தாஸ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த முருகன் பேசினாா். ஓய்வுபெற்ற காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த தேவபிரகாஷ், ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியா் சக்திவேல்முருகன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.