முகப்பு
தூத்துக்குடி

பெண் காவலா் தற்கொலை முயற்சி

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியைச் சோ்ந்தவா் சுதா (25). புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் ஒளிமுத்து, பேரூரணி மாவட்ட சிறையில் காவலராக பணியாற்றி வருகிறாா்.

இருவரும் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறை அலுவலா்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த சுதா விஷம் குடித்துவிட்டாா். அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சுதாவை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.