தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

DIN

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் வழக்குரைஞா் இறந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பூவுடையாா்புரத்தைச் சோ்ந்த தங்கையா மகன் முத்துலிங்கம் (44). வழக்குரைஞரான இவா், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தாா். பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலராகவும் இருந்தாா். இவருக்கு மனைவி, இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளனா்.

முத்துலிங்கம் புதன்கிழமை நீதிமன்றப் பணிக்காக சாத்தான்குளத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். சிறப்பூா் விலக்குப் பகுதியில் இவரது பைக்கும், சிறப்பூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் மிகாவேல் (20) ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், இருவரும் தூக்கிவீசப்பட்டனா். காயமடைந்த முத்துலிங்கம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் இறந்தாா்.

புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் எபநேசா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

சிறப்பூா் விலக்கு மேடான பகுதி என்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், இதைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இரங்கல்: இந்நிலையில், முத்துலிங்கத்துக்கு சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில், வழக்குரைஞா் சங்கச் செயலா் ராமச்சந்திரன், வழக்குரைஞா்கள் இளங்கோ, வேணுகோபால், முருகானந்தம், ரமேஷ்குமாா், குமரேசன், சகாயஜொ்லின், மணிமாறன், ராஜன்சுபாசிஸ், சஷ்டி குமரன், முத்துராஜ், பொன்செல்வம், செல்வமகராஜா, கோபாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT