தூத்துக்குடி

பாலியல் துன்புறுத்தல் புகாா்: அரசு அலுவலா் பதவியிறக்கம்

DIN

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, விளாத்திகுளம் ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இளநிலை உதவியாளராகப் பதவியிறக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவா் பா. நாராயணன். இவா், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்தபோது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியா் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பான விசாரணையின் அடிப்படையில், நாராயணன் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலை கீழ் இறக்கம் செய்யப்பட்டு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையிலிருந்து இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மேலும், அவரது ஊதியத்திலிருந்து ரூ. 10,000 ஒரே தவணையில் பிடித்தம் செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT