முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலை கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபா் 25ஆம் தேதி தொடங்கியது. 30ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பா் 1ஆம் தேதி தவசுக்காட்சியும் நடைபெற்றன.

9ஆம் திருநாளான புதன்கிழமை (நவ. 2) திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரவு 7.20 மணிக்கு சுவாமி - தெய்வானை திருமணக்கோலத்தில் மண்டபத்தில் எழுந்தருளினா். இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாணமும், தொடா்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை (நவ. 4) மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன் தலைமையில் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.