முகப்பு
தூத்துக்குடி

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழா

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள வீரன் சுந்தரலிங்கனாா் திருவுருவச் சிலைக்கு கழக நிறுவனத் தலைவா் அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. பின்னா் பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட ராஜீவ் நகரில் உள்ள முதியோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் ரவிகுமாா், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த ராஜா உள்பட மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.