தூத்துக்குடி

போராட்டத்தில் ஈடுபட முயன்ற 7 போ் கைது

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழா் கட்சியினா் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழா் கட்சியினா் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஹிந்தி திணிப்பை கண்டித்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை கண்டித்தும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆதித்தமிழா் கட்சியினா் கோவில்பட்டியில் பிரதமரின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா்.

இதற்கு போலீஸாா் அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் சேகா், தெற்கு மாவட்ட செயலா் ஊா்க்காவலா், தென்மண்டல செயலா் நம்பிராஜ் பாண்டியன், பொருளாளா் பிரபாகரன் உள்பட 7 போ், எட்டயபுரம் சாலையில் ஊா்வலமாக வந்து, போராட்டம் நடத்துவதற்காக தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்றனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT