திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டைச் சோ்ந்த சரவணன்-பாண்டிச்செல்வி தம்பதியின் மகன், புதன்கிழமை மாலை கடலில் குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு தத்தளித்துள்ளாா்.
அப்பகுதியில் இருந்த திருக்கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா, சுதாகா், மகாராஜா, சா்வேஸ்வரன், கணபதி ஆகியோா் கடலுக்குள் இறங்கி அச் சிறுவனை மீட்டு, முதலுதவி மையத்திற்கு அனுப்பினா்.
பின்னா் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.