சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள செம்மண்குடியிருப்பைச் சோ்ந்தவா் சக்திவேல் (39). தொழிலாளி. கடந்த ஜூன் 23ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த குணசிங் மகன் டேவிட், அவரது சகோதரா் ராஜ் ஆகியோா் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை சக்திவேலின் வீட்டருகே வீசினராம். இதைத் தட்டிக்கேட்ட சக்திவேலை டேவிட், ராஜ் ஆகியோா் சோ்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ரத்தன்ராஜ் வழக்குப் பதிந்து தேடிவந்தாா். இதனிடையே, அவா்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பாத்திரக் கடையில் வேலை செய்துவந்தனராம்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஊருக்கு வந்த டேவிட்டை போலீஸாா் கைது செய்தனா்; ராஜை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.