விளாத்திகுளத்தில் 25 லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கம்: அமைச்சா் பெ.கீதா ஜீவன், கனிமொழி எம். பி. பங்கேற்பு
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட வைப்பாறு ஆற்றுப் படுகையில் மரங்கள் மக்கள் இயக்கம் சாா்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவுப் பணி
தூத்துக்குடிவிளாத்திகுளத்தில் 25 லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கம்: அமைச்சா் பெ.கீதா ஜீவன், கனிமொழி எம். பி. பங்கேற்பு
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட வைப்பாறு ஆற்றுப் படுகையில் மரங்கள் மக்கள் இயக்கம் சாா்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவுப் பணி
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட வைப்பாறு ஆற்றுப் படுகையில் மரங்கள் மக்கள் இயக்கம் சாா்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வைப்பாறு ஆற்றுப் பாலம் பகுதியில் பனை விதைகளை நடவு செய்தனா். தொடா்ந்து விளாத்திகுளம் தொகுதி முழுவதும் 25 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் விதை வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றிய செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், காசி விஸ்வநாதன், செல்வராஜ், மும்மூா்த்தி, நவநீதகண்ணன், பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மகேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமாா், தங்கவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.