முகப்பு
தூத்துக்குடி

கீழக்கருங்கடலில் காய்ச்சல் தடுப்பு முகாம்

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கீழக்கருங்கடலில் காய்ச்சல் தடுப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கீழக்கருங்கடலில் காய்ச்சல் தடுப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அனைத்து வீடுகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டு, தண்ணீரில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டன. கொசுப் புகை மருந்து அடிக்கப்பட்டது. நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. காய்ச்சலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து நலக்கல்வி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வடக்கு இளமால்குளத்திலும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் தலைமையில் ஆஷா பணியாளா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →