ஆத்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு நாள்
ஆத்தூரில் இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆத்தூரில் இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தங்கராஜ் தலைமை வகித்தாா். ஆத்தூா் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்புப் பொருளாளா் ராஜேந்திரன், ஆத்தூா்குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆத்தூா் பேரூராட்சி துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள், கவுன்சிலா் கேசவன், நகர திமுக செயலா் முருகானந்தம், அதிமுக செயலா் சோமசுந்தரம், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.