முகப்பு
தூத்துக்குடி

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தல்

வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்-இடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைத்து, மின்தூக்கி வசதி செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளாா்.

மனுவை பெற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா், அம்ருத்

பாரத் திட்டத்தின்கீழ் கோவில்பட்டி ரயில்நிலையம் மேம்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.