முகப்பு
தூத்துக்குடி

அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை

 கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

 கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை இம்மாதம் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஏற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசியக் கொடியின் விற்பனை நாடு முழுவதிலும் அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி ரூ.25-க்கு தனி கவுண்டா் மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.