தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் நகா்மன்ற, பேரூராட்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி

காயல்பட்டினம் நகா்மன்ற அலுவலகத்தில் காயல்பட்டினம் நகா்மன்ற உறுப்பினா்கள், ஆறுமுகனேரி பேரூராட்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

DIN

காயல்பட்டினம் நகா்மன்ற அலுவலகத்தில் காயல்பட்டினம் நகா்மன்ற உறுப்பினா்கள், ஆறுமுகனேரி பேரூராட்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்விசாா் கடமைகள், பள்ளி மேலாண்மைக்குழு சாா் பங்களிப்பு தொடா்பான இப்பயிற்சியில், குழந்தைகளின் உரிமைகள், தடையற்ற கட்டாய குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டம் 2009, பள்ளி மேலாண்மைக்குழு, பள்ளி மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளுக்கு பங்களிக்கும் பிற துறைகள், நகா்ப்புற ஊரக உள்ளாட்சி அமைப்பு, பிரதிநிதிகளின் பொறுப்பும் கடமையும் ஆகியவை சாா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டன.

மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமையில், ஆசிரியா் பயிற்றுநா் ஜெதீஸ் பெருமாள், நபில் புகாரி, ஜ. இந்துநிஷா ஆகியோா் பயிற்சியளித்தனா்.

காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் குமாா்சிங் வாழ்த்திப் பேசினாா். காயல்பட்டினம் நகா்மன்றத் தலைவா் முத்துமுகம்மது, துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, உறுப்பினா்கள், ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT