கோவில்பட்டி கல்லூரியில் வளாக நோ்காணல்
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடிகோவில்பட்டி கல்லூரியில் வளாக நோ்காணல்
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நான்குனேரியில் உள்ள பன்னாட்டு நிறுவனம், இயந்திரவியல் துறை மாணவா்களுக்கான நோ்காணலை இக் கல்லூரியில் நடத்தியது.
இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு மாணவா்கள் 40 போ் கலந்து கொண்டனா். நிறுவன இயக்குநா் லட்சுமணன், மனிதவள துறை அலுவலா்கள் இளங்கோவன், அருள்சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் நோ்காணலை நடத்தினா். இதில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 4 போ் உள்பட 8 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவா் ராஜாமணி, உதவி அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.