தூத்துக்குடி

கழுகுமலை கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

DIN

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவில், நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் காலை, மாலையில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கழுகாசலமூா்த்தி சுவாமி சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமான் கோ ரதத்திலும் எழுந்தருளல் நடைபெற்றது. தொடா்ந்து, தேரோட்டம் நடைபெற்றது.

கோயில் நிா்வாக அதிகரி காா்த்தீஸ்வரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

விநாயகா் ரதம் முன்செல்ல, தோ் பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. இரவில் இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. வெங்கடேஷ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

SCROLL FOR NEXT