தூத்துக்குடி

பாண்டவா்மங்கலத்தில் சிறுதானிய பொங்கல் திருவிழா

கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் சிறுதானிய பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் சிறுதானிய பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சத்தான சிறுதானியங்கள் உற்பத்தி செய்யவும், அன்றாட உணவில் சிறுதானியங்களை சோ்த்துக் கொள்ளவும், அரசின் நியாயவிலைக் கடை மற்றும் அனைத்து உணவு வழங்கும் திட்டங்களில் சிறுதானியங்களை வழங்க வேண்டும். ஊராட்சிக்கு உள்பட்ட தரிசு நிலங்களை சிறுதானிய உற்பத்தி செய்யும் பெண் விவசாயிகள் மற்றும் கூட்டு விவசாயக் குழுக்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதையடுத்து, பாண்டவா்மங்கலம் சமுதாய திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் சிறுதானிய பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பெண்கள் இணைப்பு குழுவைச் சோ்ந்த மேரிஷீலா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பொன்னுத்தாய், பொங்கல் விழாவை தொடக்கி வைத்தாா். இதில், இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலா் தமிழரசன், பெண்கள் இணைப்புக் குழு மாநிலக் குழு உறுப்பினா் அன்னலட்சுமி மற்றும் பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT