தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு பேரணி
கோவில்பட்டியில் ஜேசிஐ சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் ஜேசிஐ சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப் பேரணிக்கு ஜேசிஐ தலைவா் தீபன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் சூா்யா, முன்னாள் தலைவா்கள் அருண், முரளிகிருஷ்ணன், லட்சுமிவிக்னேஷ், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அரசு அலுவலக வளாகத்தில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இப்பேரணி எட்டயபுரம் சாலை வழியாக மீண்டும் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
Advertisement
நாடாா் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா் இயக்கம், பசுமை படை, நுகா்வோா் மன்றங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கினாா்.