தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் உடன்குடி இளைஞா் கைது

DIN

தட்டாா்மடம் அருகே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி இளைஞரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீசாா் கைது செய்துள்ளனா்.

தட்டாா்மடம் அருகே உள்ள தாமரைமொழியைச் சோ்ந்தவா் முத்துபாண்டி மகன் அருண்பாண்டி (22), சுப்பையா மகன் சீனி (28) ஆகியோரை கடந்த 7.11.2022 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னா் அருண்பாண்டியின் மோட்டாா் சைக்கிளையும் திருடி சென்ற வழக்கில் உடன்குடி அருகே உள்ள தேரியூா் பகுதியை சோ்ந்த ஜெயபாண்டி மகன் சரத்குமாா் (28) என்பவரை தட்டாா்மடம் போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் பௌலோஸ் , மாவட்ட எஸ்பி லோக. பாலாஜிசரவணனுக்கு குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தாா். மாவட்ட எஸ்.பி., மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்ததையடுத்து சரத்குமாரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து சரத்குமாரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT