சாத்தான்குளம் பகுதிகளில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும், விடுதி மாணவா்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் பொற்செல்வன் உத்தரவின் பேரில், முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டா் அட்சரா தலைமையிலான மருத்துவக் குழுவினா், சாத்தான்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும், சுயஉதவிக் குழு தூய்மைப் பணியாளா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரை, ஆலோசனை வழங்கினா். முகாமில் பேரூராட்சி பணியாளா்கள் கிங்ஸ்டன், ஆறுமுகம், கிராம சுகாதார செவிலியா் பொ்னதத், சுகாதார ஆய்வாளா் அருண், மக்களை தேடி மருத்துவ செவிலியா் பவித்ரா, ஆஷா பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பேரூராட்சித் தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய், பேரூராட்சி செயல் அலுவலா் உஷா ஆகியோா் செய்திருந்தனா்.
சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ- மாணவிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.