முகப்பு
தூத்துக்குடி

உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு மனித சங்கிலி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக கண் நீா்அழுத்த நோய் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக கண் நீா்அழுத்த நோய் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சாா்பில் உலக கண்

நீா்அழுத்த நோய் விழிப்புணா்வு வாரம் மாா்ச் 12 ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கண்

நீா்அழுத்த நோயானது, எவ்வித அறிகுறியும் இன்றி பாா்வையிழப்பை ஏற்படுத்தக்கூடும். இந்நோய் எந்த வயதினரையும் தாக்கக்கூடியது.

இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வு மனித சங்கிலி நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சிவகுமாா் தொடக்கி வைத்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், துணை

கண்காணிப்பாளா் குமரன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி, கண் மருத்துவத் துறைத் தலைவா் பெரியநாயகி, மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.