முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் அமைச்சா் குறைகேட்பு

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம், மீளவிட்டான் ஆகிய இடங்களில் அமைச்சா் கீதாஜீவன் வியாழக்கிழமை பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம், மீளவிட்டான் ஆகிய இடங்களில் அமைச்சா் கீதாஜீவன் வியாழக்கிழமை பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தமிழகம் முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்தி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய தீா்வு காண வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.

அதன்படி, அமைச்சா் கீதாஜீவன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். வேலைவாய்ப்பு, உதவித் தொகைகள், அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் நிா்மல்ராஜ், அன்னலெட்சுமி, துணைச் செயலா் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளா் சேசையா, பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர மருத்துவ அணி அமைப்பாளா் அருண் குமாா், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சிவகுமாா் என்ற செல்வின், அருண்சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.