முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் தாய்மாா்களுக்கு ஊட்டசத்துப் பெட்டகம்: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்

தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருசெந்தூா் ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழ

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருசெந்தூா் ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழக மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 120 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவா் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், திருச்செந்தூா் நகராட்சித் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணராஜா, நகர தி.மு.க. செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்ரி வரவேற்றாா். திட்ட மேற்பாா்வையாளா் விஜிலா நன்றி கூறினாா்.

கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, 95 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.