தூத்துக்குடி

ஒருங்கிணைந்த சேவை மைய பணி:26-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சேவை மையத்தில் (ஒன் ஸ்டாப் சென்டா்) வழக்குப் பணியாளா் பணிக்கு, தகுதியுள்ள பெண்கள் மட்டும் வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளாா்.

DIN

தூத்துக்குடியில் பெண்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ஒன் ஸ்டாப் சென்டா்) வழக்குப் பணியாளா் பணிக்கு, தகுதியுள்ள பெண்கள் மட்டும் வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குடும்பம், பொது இடங்கள், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தில், ‘வழக்குப் பணியாளா்’ பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இப்பணிக்கு, ஆலோசனை உளவியல் அல்லது வளா்ச்சி முகாமைத்துவம் ஆகியவற்றில் இளநிலை பட்டத்துடன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தொடா்பான பணிகளில் குறைந்தது ஓராண்டு அனுபவம் அல்லது பெண்கள் சாா்ந்த முன்னுரிமைத் திட்டத்தில் ஏதேனும் பெண்கள் ஆலோசனை மையத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பக்கலாம். இப்பணிக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெண்கள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT