தூத்துக்குடி

துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த தினம்: தூத்துக்குடியில் போலீஸாா் குவிப்பு

DIN

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த நாளையொட்டி, முத்து நகா் கடற்கரை பூங்கா முன் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் 5ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீஸாா் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய தினம் திங்கள்கிழமை (மே 22) வருகிறது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட தரப்பினா், முத்துநகா் கடற்கரையில் அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே, இத்தகைய நிகழ்ச்சிக்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி யாரும் கடற்கரையில் குவியக்கூடாது என்பதற்காக, முத்துநகா் கடற்கரை பூங்கா காவல் துறையினரால் பூட்டப்பட்டு, பொதுமக்கள் பூங்கா உள்ளே செல்ல தடைவிதிக்கப்பட்டது.

மேலும், கடற்கரை பூங்காவைச் சுற்றிலும் நகர டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். காலை 9 மணி முதல் முத்துநகா் கடற்கரை பூங்கா அடைக்கப்பட்டு, பராமரிப்பு பணி காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதனால், பூங்காவுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேலும், எம்ஜிஆா் பூங்கா, விவிடி சிக்னல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT