தூத்துக்குடி

தூத்துக்குடியில் மே 26இல் திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தூத்துக்குடியில், திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 26) நடைபெறவுள்ளது.

DIN

தூத்துக்குடியில், திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. அவைத் தலைவா் எஸ். அருணாச்சலம் தலைமை வகிக்கிறாா்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுதல், கட்சி உறுப்பினா்கள் சோ்ப்பு, கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. எனவே, மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள், சாா்பு அணி மாவட்ட அமைப்பாளா்கள், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT